பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானதையடுத்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திராணி இன்று காலை காலமானார். அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் கூறப்படுகிறது. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திராணி மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இன்று இரவு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.