சமூக வலைதளங்களை பயன்படுத்த இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு தடை விதிப்பதாக அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பொது மக்கள் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டம் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ மகிந்தா ராஜபக்சே உட்பட ராஜபக்சவின் குடும்பத்தினர் பதவி விலகினார்கள். இந்நிலையில் மீண்டும் இலங்கையில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதாகவும் போராட்டம் பரவ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில் அரசு அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.