கர்நாடக கல்வியமைச்சர் நாகேஷ் கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும் என்று கூறியுள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்து அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் எதை பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் செய்தியாளர்களிடம், “கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடை தொடரும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். உலகெங்கிலுமுள்ள பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருவதால் சிறந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு இடைக்காலத்தில் பொருந்தும் என்பதால் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கிறது” என்று கூறியுள்ளார்.