இனி சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையளிக்க பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றாலும் இது குறித்த செய்தி கசிந்து கொண்டிருப்பதால் வங்கி ஊழியர்களுக்கு மத்தியில் இதே பேச்சுகள் பரபரப்பாக உள்ளது.