ரசிகர்கள் “அவதார் 2” திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்து பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெயிலர் தற்போது ரிலீசாகியுள்ளது.
“அவதார்” படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகுமென கூறப்படுகிறது. இந்நிலையில் “அவதார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைத்துள்ளனர். உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “அவதார் -2” திரைப்பட டிரெயிலர் “அவதார்” என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ரிலீசாகியுள்ளது. தண்ணீருக்குள் நடக்கும் சம்பவத்தைப் பற்றிய கதை எனத் தெரிகிறது. மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி, வியப்பூட்டும் படியும் உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், 30 ஆயிரம் லைக்குகளும், ஆயிரம் கமெண்ட்களும் குவிந்துள்ளன. இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.