தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்குகிறது. இவ்வாண்டு இலவச வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
இன்று தலைமைச் செயலகத்தில் இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதைப் போன்று இந்த ஆண்டும் பொங்கல் தினத்தில் வேட்டி சேலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வேஷ்டி சேலை வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முற்றிலும் புதுமையான 15 டிசைன்களில் சேலையும், 5 டிசைன்களில் வேஷ்டியும் வழங்கப்பட உள்ளதாகவும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு வேஷ்டி சேலைகள் டிசைன்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.