கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய, மாநில அரசின் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத்திட்டம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் அறிவிப்பின்படி, 2021-2022ம் ஆண்டிற்காக கனவு இல்லத் திட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது மற்றும் கலைஞர் விருது பெற்ற மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் கவிஞருமான புவியரசு, பூமணி, கு. மோகனராசு, இமயம், ஆகிய 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகள் கடந்த ஜூனில் வழங்கினார். 2022-2023ம் ஆண்டிற்காக கனவு இல்ல வீட்டு திட்டத்திற்கு, சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களான, ஜி. திலகவதி. கோதண்டராமன், சு. வெங்கடேசன், மருத நாயகம், எஸ்.ராமகிருஷ்ணன், கா.ராஜன், ஆர்.என்.ஜோ.டி. குரூஸ், வண்ணதாசன் உட்பட 10 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.