சுற்றுலாத் தளமான குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்ததை அடுத்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் மெயின் அருவி தவிர பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் - தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!
ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!
ஏர்டெலின் அதிரடி திட்டம்,3300 GB  வரையிலான டேட்டாவின் நன்மை
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
 
				


