18 வயது சிறுமியை ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் அயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்த ரயிலிலிருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அவரும் தன்னைத் தானே கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஸ்ருமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அச்சிறுமியின் பெயர் ஜஹானாகஞ்ச் என்றும் அவரை தன்ஞ்சய் என்ற இளைஞர் ஒருதலையாய்க் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.