தெலுங்கி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு முதல் குழந்தை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியருக்கு முதல் குழந்தையை எதிபார்த்துள்ளதாக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகரான ராம்சரண் “மகதீரா,” “ஆச்சார்யா”, “வினாய விதீயா,” “ஆர்.ஆர்.ஆர்” உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு ராம்சரணுக்கும் உபசனாவுக்கும் திருமணம் நடந்தது. ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியர் இருவரும் அவர்களின் முதல் வாரிசை எதிர்பார்த்துள்ளதாக ராம்சரணின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே, ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.