ஜப்பான் அரசு குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம் ரூபாய் மானியம் என அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதாகவும் அதேபோல் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அதனால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டில் வருங்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.