காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளார் காதலன். இக்கொடும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தீயில் கருகிய அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் பூஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பூஜாவை லோகேஷ் வலியுறுத்தியுள்ளார். பூஜா திருமணத்திற்கு மறுத்ததால் திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன் பூஜா திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து லோகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.