உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் விமான கோபுரத்தில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடங்கப்படுவதாக தொல்லியல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. 1000 ஆண்டுகளை கடந்து இக்கோவிலின் கோபுரம் கம்பீரமாக உள்ளது. மேலும் இக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம் மற்றும் மழைநீரால் படிந்துள்ள பாசிகளை அகற்றும் பணி நடைபெற இருப்பதாகவும் இதையடுத்து கோவில் கோபுரத்திற்கு ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பழமை மாறாமல் தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு ரசாயன வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம். எனவே விரைவில் அப்பணிகள் தொடங்க உள்ளது.