திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுக அரசு தயாரித்த கவர்னர் உரையை கவர்னர் படிக்கவில்லை என்றும் கவர்னர் ஒரு சில வார்த்தைகளை விட்டுவிட்டார் என்றும் சில வார்த்தைகளை இணைத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு அரசு தயாரித்த உரையை கவர்னர் படிப்பதுதான் மாண்பு என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே திமுகவினரின் வாதமாக உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஒரு அரசு தயாரித்த பெயிலியர் உரைதான் தற்போது சட்டமன்றத்தில் கவர்னரால் வாசிக்கப்பட்டு வருகிறது என்றும் எனவே கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநாட்டுப்பு செய்கிறோம் என்றும் முக ஸ்டாலின் அதில் கூறியுள்ளார். இந்த வீடியோவை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.