நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சலார்” திரைப்படமும் “கேஜிஎப்” திரைப்பட பாணியிலேயே எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் “சலார்” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிருத்திவிராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு உட்பட ஏராளாமானோர் நடித்து வருகின்றனர். 2023ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தோடு மொத்தமாக முடிய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தர் கூறியுள்ளார். “கேஜிஎப்” திரைப்படத்தை போலவே “சலார்” திரைப்படமும் இரண்டு பாகங்களாக ரிலீசாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டு பாகங்களின் ஷுட்டிங்கும் மொத்தமாக முடிந்த பின்னரே முதல்பாகம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.