பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் 50,674 மாணவ மாணவிகள் +2 தேர்வு எழுதவில்லை என பள்ளி அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

இன்று 2022&-23ம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று +2 தேர்வு தொடங்கிய நிலையில் இன்றைய முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவ மாணவிகள் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இத்தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related posts:
மதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு....
விவசாயிகள் நலன் கருதி பயிர் கடன் தள்ளுபடி :15 நாட்களுக்குள் ரசீது வழங்கப்படும் -முதல்வர்
பாஜகவின் பிரதிநிதி போல் தமிழக கவர்னர் செயல்படுகிறார் திருச்சியில் துரை வைகோ பேட்டி.
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில...



