கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது.
ஆனால், தற்போது மீண்டும் 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்களை வரும் ஏப்ரல் மாதம் வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் ஒன்பதாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன்டிஜேசி தெரிவித்துள்ளார். இத்தகவல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள் மைக்ரோசாப்ட் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது பெரிய நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைநீக்க நடவடிக்கை காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.