போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 தடவைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% சலுகை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் சொகுசாக இருப்பதால் அரசு பேருந்துகளை நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை என சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.