தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி 300-க்கும் அதிகமான பாதிப்புகளும் சென்னையில் மட்டும் 100க்கும் அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. 5 லட்சம் கோவாக்சின் மற்றும் ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் மத்திய அரசு இந்த தடுப்பூசிகளை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.