செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருந்த வீட்டை காலி செய்த பிறகு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கேட்டவரை வீட்டின் உரிமையாளர் கொலை செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலருகே 60 வயது முதியோர் ஒருவர் சமீபத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்தார். அவருடைய மகளுக்கு மகேந்திர சிட்டியில் வேலை கிடைத்ததால் இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. குடியிருந்த வீட்டில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள் இல்லை என்பதால் அவர் 28 நாட்களில் வீட்டை காலி செய்வதாகவும் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். வீட்டின் உரிமையாளர் மற்றும் 60 வயது முதியோருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் வீட்டின் உரிமையாளர் மகன் முதியவர் சந்திரசேகரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரின் மகன் நரேந்திரனை கைது செய்துள்ளனர்.