அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியிலேயே மால்களில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டன என்று கூறியுள்ளார்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதாக வெளிவந்த செய்திக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்பகுதியில் தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது என்று கூறினார். மேலும் சாலை பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போன்ற போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்தியது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.