மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக திரைப்டத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் வரும் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11ம்தேதி வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், இதே தேதியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட “மாவீரன்”, “ஜெயிலர்” இரு படங்களுக்குமிடையே கடும் போட்டி நிலவும் என கூறப்பட்டது. “மாவீரன்” திரைப்படம் வரும் ஜூலை மாதம் 14ம் தேதி ரிலீசாகும் என்று இன்று படக்குழு அதிகரப்பூர்வமாக அறிவித்துள்ளது.