கட்டுப்பாட்டு அறையிலிருந்தே போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை அமல்படுத்தப்படவுள்ளதால் இனி போக்குவரத்து விதியை மீறுபவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது, சிக்னல்களை மீறி செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது போன்ற போக்குவரத்து விதிகளுக்கு மீறி வாகன ஓட்டிகள் செயல்பட்டால் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அபராதம் விதிக்க புதிய நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் குறித்த தகவல்கள் தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அபராத சீட்டைப் பெற்றுக் கொண்டு இணையத்தில் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் அபராதத்தை செலுத்தி கொள்ளலாம், ஒருவேளை குற்றம் நடந்த போது வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்டவில்லையென்றால் அவர் காவல்துறை அதிகாரி முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும், தான் ஓட்டுனர் அல்ல என்பதை அவர் தகுந்த ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.