அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மே 29ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பேரணியாகச் சென்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அடுத்த கட்டமாக தமிழகம் முழுதும் மே29ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கள்ளச்சாராய உயிர் இழப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுவரை எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் அதிமுகவும் அரசை எதிர்த்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளது.