நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.
தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் ஃபர்ஹான் என்ற தனது நண்பரின் பிறந்தநாளுக்காக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து வாழ்த்தியிருந்தார். உடனே இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலரா என்று வதந்திகள் பரவ தொடங்கின. இதையடுத்து கீர்த்தி சுரேஷிடம் இது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, “கோபப்பட்டு பதில் சொன்ன அவர் “ஏங்க.. என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே இருங்கீங்க.. நடக்குறப்ப நானே சொல்றேன்” என கூறினார். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர், கீர்த்தி சுரேஷ் குறித்து, “நான் பார்த்ததிலேயே என் மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் தான் மிகவும் அழகாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.