கடந்த மார்ச் மாதம் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சசிகுமார், புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ‘அயோத்தி’ திரைப்படம் ரிலீசானது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லியிருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து மந்திரமூர்த்தி மீண்டும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கே அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். கடந்த சில நாட்களாக மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தை மந்திரமூர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு மந்திரமூர்த்தி இப்போது விளக்கமளித்துள்ளார். அதன்படி மாதவன் கங்கனா நடிக்கும் படத்தை தான் இயக்கவில்லை எனக் கூறியுள்ளார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் வேறொரு படத்தில் கங்கனா மற்றும் மாதவன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.