அதிமுக கட்சியின் ஐடி விங் டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் சோதனை, உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை நடைபெறுகிறது” என பதிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து குறிப்பிடப்பட்ட பதிவில், “அதிமுக ஆட்சியில் மேடை தோறும் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து வீராவேசமாக முழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! எங்கள் ஆட்சியிலாவது தலைமை செயலகத்தில் அதிகாரியின் அறையில்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது, ஆனால் இன்று உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சரின் அலுவலகத்திலேயே சட்டத்துக்கு புறம்பான பணப்பரிமாற்றம், நேரடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையின் சோதனை நடக்கிறதே. இப்போது மக்களுக்கு தெரியவரும் முதுகெலும்பில்லாதவர் யார் என்று! இதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என சப்பைக்கட்டு கட்டுவீர்களா அல்லது மேற்கு வங்க முதலமைச்சர் போல துணிந்து எதிர்ப்பீர்களா?” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.