உள்துறைஅமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமரே நாட்டில் இல்லாத போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறும் போது, “கடந்த 50 நாட்களாக மணிப்ப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரதமர் அமைதி காக்கிறார் தற்போது பிரதமர் நாட்டிலேயே இல்லை இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிரதமருக்கு இந்த கூட்டம் முக்கியமில்லை என்பது தெளிவாக தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் டில்லியில் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.