முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி ஒருவருக்கு மட்டுமே உள்ளது என பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “அதிமுக திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை, எத்தனையோ கட்சிகள் வரும் போகும், ஆனால் திமுக பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சர் ஆவார் என யாராவது நினைத்தார்களா? அவர் சாதாரண ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார், அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமராக உயர்வார்” என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
Related posts:
எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?
ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.
விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி.போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டி...
பாஜக ஆட்சியை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு!



