கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த முதல் படமான “அறம்” விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உடனடியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது எனப் படக்குழு அறிவித்தது.
ஆனால் நயன்தாரா ஒத்துக்கொண்டு இருந்த சிலப் படங்களால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை உருவானது. அதனால் அதற்கிடையே கோபி நயினார் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதியப்படம் ஒன்றை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் முழுதாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்க, இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நடிப்பில் சமீபகாலமாக எந்த படமும் பெரிய அளவில் ஓடாத நிலையில் அவர் இப்போது அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.