நாளை உலகமெங்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீசாகிறது. தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இத்திரைப்படம் “மாவீர்டு” என்ற பெயரில் டப்பாகி ரிலீசாகிறது. படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இத்திரைப்படத்துக்காக சிவகார்த்திகேயன் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போது துபாய்க்கு படக்குழு சென்றுள்ளது. முன்னதாக படக்குழுவினர் ஐதராபாத் மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் புரமோஷனுக்காக சென்றனர். “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “மண்டேலா” என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் மூலமாக அர்ஜுன் விஷ்வா தயாரித்துள்ளார். நாளை காலை 9 மணி சிறப்புக் காட்சியோடு இத்திரைப்படம் தமிழில் ரிலீசாகவுள்ளது.