கலைஞர் நூற்றாண்டு நூலகம் முதலமைச்சர் திறப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மதுரைக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர்.