அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்ததின் முடிவில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று விடிய விடிய சோதனை நடந்தது. இன்று அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதனை அடுத்தவர் அதிகாலை விசாரணை முடிந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் இந்நிலையில் இந்தோனேசியா நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் வைப்புத்தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்னும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இச்சோதனையில் 41.9 கோடி ரூபாய் மதிப்பு வைப்புத்தொகை முடக்கம் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.48 கோடி வருவாய் வந்தது எப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.