முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன். கலைஞர் மறைவுக்குப் பின் பெரியாரும், அண்ணாவும் மக்கள் மனதில் இருந்து அழிந்து விடுவார்கள், திராவிட கருத்தியல் அழிந்துவிடும் என நம் எதிரிகள் நினைத்தனர். அவர்கள் ஆசையில் மண் விழுந்துவிட்டது. அதற்குக் காரணம் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுடைய சமூகமாக திராவிட வாரிசுளாக நாம் இருப்பதால்தான்’’ என்று பேசினார்.