உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 64ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அவருக்கு திரைத்துறையில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
“களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக அவரது கலையுலக சேவையை பாராட்டும் பொருட்டு சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் வளர்ந்த பின்னர் சாதிப்பது வெகு அரிது. அந்த வகையில் கதாநாயகனாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பல பரிமானங்களில் தன்னை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் கமல்ஹாசன். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து அவரின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது “இந்தியன் 2,” “கல்கி ஏடி 2898” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.