அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்
செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போக்குவரத்து துறையில் பணி அமத்துவதற்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கூட்டுச்சதி நடந்துள்ளது என்றும் நாமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. விசாரணையின் போது நம்பத் தகுந்த விளக்கத்தை செந்தில் பாலாஜி அளிக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.