லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

Filed under: அரசியல்,இந்தியா |

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். லே என்ற பகுதியிலிருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பைக்கில் சவாரி செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவர் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவாரா-?