நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு சரியான ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் ரிலீஸான அவர் நடித்த “ஆதிபுருஷ்” திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது “கே.ஜி.எப்” இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். படத்தை “கே.ஜி.எப்” தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். படத்தின் டீசர் ஜூலை 6ம் தேதி அதிகாலை வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் “கே.ஜி.எப்” படத்தின் மூன்றாம் பாகம் போலவே இருப்பதாக கூறினர். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தின் டிரெயிலர் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.