98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் தற்போது முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். பகுதி நேர தொகுப்பூதிய தூய்மை பணியாளார்கள் 98 பேரை முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.39,91,344 நிதி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.