அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவர் மீது குண்டர் சட்டம் பாய் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதை தடுக்க கோரி அவரது மனைவி நிரோஷா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பல வழக்குகளில் தனது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



