இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோர்பர் 19ம் தேதி வெளியான திரைப்படம் “லியோ.”
உலகம் முழுதும் இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வருகிறது. இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்பட ரிலீஸுக்கு முன்பு, இப்பட ரிலீஸுக்குப் பின்பும் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் தன் வலைதள பக்கத்தில் “படிச்சவனோ, பாமரனோ, ஒரு படத்தை பார்த்தா அது அப்பவே புரியணும். அதை வுட்டுட்டு டைரக்டரே ஒவ்வொரு சேனலா உட்கார்ந்து நான் அதை நினைச்சு எடுத்தேன், இதை நினைச்சு எடுத்தேன்னு சொல்றத எப்படி எடுத்துக்கறது? ஒண்ணு பண்ணலாம்… “லியோ” ஒடுன தியேட்டர்ல மறுபடியும் ரசிகர்களை வரவழைச்சு இவரோட பேட்டிகளை திரையிடலாம். என்னய்யா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு “மாஸ்டர்,” “விக்ரம்,” “லியோ” திரைப்பட வசன கர்த்தாவும் இயக்குனருமான ரத்னகுமார், “படிச்சவனும் பாமரனும் Quoted tweetsல என்ன சொல்றாங்கனு தயவு செஞ்சி பாருங்க சார்” என்று தெரிவித்துள்ளார்.