மருத்துவ நிபுணர்கள் விரைவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியை தொடலாம் என எச்சரிக்கிறார்கள்.
கடந்த காலங்களை விட இந்தியாவில் சமீபமாக அதிகமானோர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சிறுவர்கள், இளைஞர்களுக்கு கூட சர்க்கரை நோய் தென்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஒரு புள்ளிவிவரத்தின்படி உலக அளவில் 7 பேருக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டால் அதில் ஒருவர் இந்தியராக உள்ளாராம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சர்க்கரை நோயினால் விரைவில் இந்தியாவில் 20 கோடி பேர் வரை பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சர்க்கரை வியாதியில் டைப் 1 மோசமானது. இது சிறுநீரகத்தை பெரிதும் பாதிக்கிறது. டைப் 1 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தினசரி இன்சுலின் செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. டைப் 2 நீரிழிவு பிரச்சினை ஆரொக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே கட்டுப்பட கூடியது. நாம் பெரும்பாலும் கார்ப்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள், இனிப்புகளை எடுத்துக் கொள்வதை முடிந்தளவு தவிர்ப்பது நீரிழிவு பிரச்சினையிலிருந்து காக்க உதவும்.