பொதுமக்கள் மாஸ் அணிய வேண்டும் என்று புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது போல் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாகவும் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - வேல்முருகன்!
புதுவை அரசு வெளியிட்ட பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு!
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!
இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர்: ஒதிஷாவில் சாத்தியமான கனவு தமிழ்நாட்டில் நனவாவது எப்போது?