இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு எட்டியுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது. ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1ம் தேடி முதல் முன் தேதியிட்டு அமலாகும் இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதனால் வங்கிகளுக்கு ரூ.7898 கோடி கூடுதலாக செல்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.