சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. அவர் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு அவரது தண்டனை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அமைச்சர் பதவி பறிபோகும். அமைச்சர் பொன்முடி தீர்ப்பு குறித்து பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், அதிமுகவை சேர்ந்த யாருமே விமர்சனம் செய்யாமல் அமைதியாக உள்ளனர். இது குறித்து அதிமுக வட்டாரத்தில் கூறிய போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல சொத்து குவிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்பும் அடுத்தடுத்து வரும்போது இதேபோல் விமர்சனம் செய்யப்படும் என்பதால் பொன்முடி வழக்கு குறித்து அதிமுகவினர் எந்தவித விமர்சனம் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.