முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை, தயாரிப்பு எனப் பன்முகக் கலைஞராக பணியாற்றியவர்.
கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி அரசியல், மற்றும் திரைத்துறையில் பல முன்னெடுப்புகள் எடுத்துள்ள அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு முக்கிய பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில், சென்னையில் ஏற்பட்ட அதிகனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் இவ்விழா தேதி மாற்றப்பட்டது. அதன்படி, கலைஞர் 100 விழா இன்று 6ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடக்கிறது. எனவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான புதிய அழைப்பிதழை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களை நேரில் சந்தித்து வழங்கினார். இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் 20 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏ.எல்.விஜய் இயக்கிய கலைஞரின் டாக்குமெண்டரி, அவர் குறித்த நாடகம், நடிகர்களின் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.