இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்று இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் “தக்லைஃப்” படத்தில், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்துள்ளதாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் படத்தின் ரிலீஸ் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.