தமிழ்நாடு அரசு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை செய்கிறது என்று செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி என்றும் பழைய தகரத்திற்கு பாலிஷ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தமிழக அரசை கண்டித்து கடந்த மே மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை நடந்த நிலையில் செல்லூர் ராஜு நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன் பின் செய்தியாளர்களிடம், “அவதூறு வழக்கு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை, திமுக ஆட்சிகாலத்தில் தொடர்ந்த கொலை வழக்கிலேயே விடுதலை பெற்ற எனக்கு, இதுபோன்ற வழக்குகள் எல்லாம் ஜீஜீபி. நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதை தான் தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் பேசுகிறார்கள். ஆனால் அவதூறு வழக்கு என்மீது போடுப்படுகிறது, பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்கிறது” என்று பேசினார்.