சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆனால் இப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் 75வது படம் “அனனப்பூரணி.” இத்திரைப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார். தமன் இசையமப்பில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில் உருவான “அன்னப்பூரணி” கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. “ராஜா ராணி” படத்திற்குப் பின் ஜெய், நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியது. எனவே சமீபத்தில் வெளியான இப்படம் திரையங்கில் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை வாங்கியிருந்த நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், இப்படத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதாவது, ராமர் அசைவம் சாப்பிட்டதாக இப்படத்தில் வசனம் இருந்ததால், இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.