தனுஷ் 51 படத்தின் பூஜை!

Filed under: சினிமா |

சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாம். படத்துக்கு முதலில் தமன் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்று அப்படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடங்கியுள்ளது. இதில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.